Q1. உலகின் தொன்மையான நாகரிகம் எது? |
விடை: மெசபடோமியா நாகரிகம். |
Q2. சீன நாகரிகத்தின் காலம் எது? |
விடை: பொ.ஆ.மு 1700 முதல் 1122 வரை. |
Q3. சிந்துவெளி நாகரிகத்தின் காலம் கூறுக.? |
விடை: பொ.ஆ.மு 3300 முதல் 1900 வரை. |
Q4. எகிப்து நாகரிகத்தின் காலம் யாது? |
விடை: பொ.ஆ.மு 3100 முதல் 1100 வரை. |
Q5. மெசபடோமியா நாகரிகத்தின் காலம் எது? |
விடை: பொ.ஆ.மு 3500 முதல் 2000 வரை. |
Q6. பண்டைய நாகரிகங்களை வரிசைப்படுத்துக.? |
விடை: மெசபடோமியா நாகரிகம், சிந்துவெளி நாகரிகம், எகிப்து நாகரிகம், சீன நாகரிகம் (Memory Trick: M.S பண்றது EC). |
Q7. ஹரப்பா என்ற சொல்லின் பொருள் யாது? |
விடை: புதைந்த நகரம். |
Q8. ஹரப்பா நகரத்தை முதலில் கண்டறிந்தவர் யார்? |
விடை: சார்லஸ் மேசன். |
Q9. எந்த ஆண்டில் லாகூரிலிருந்து கராச்சிக்கு ரயில்பாதை அமைக்கப்பட்டது? |
விடை: 1856. |
Q10. ஹரப்பா, மொகஞ்சதாரோ அகழ்வாய்வு எந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது? |
விடை: 1920. |
Q11. சிவிஸ் என்ற லத்தீன் வார்த்தையின் பொருள் யாது? |
விடை: நகரம். |
Q12. 1924 ஆம் ஆண்டு இந்திய தொல்பொருள் ஆய்வுத் துறையின் இயக்குநர் யார்? |
விடை: ஜான் மார்ஷல். |
Q13. தொல்லியல் துறையினர் நிலத்தடியை ஆய்வு செய்ய பயன்படுத்தும் கருவி எது? |
விடை: காந்தப்புல வரைவி. |
Q14. தொல்லியல் துறையினர் புதைந்த நகரங்களின் மேற்பரப்பை அறிய பயன்படுத்துவது எது? |
விடை: வான்வழிப் புகைப்படங்கள். |
Q15. எஞ்சிய தொல்பொருட்களை அறிய தொல்லியல் துறையினர் பயன்படுத்துவது எது? |
விடை: ரேடார். |
Q16. தொல்பொருட்களின் காலத்தை அறிய பயன்படுத்துவது எது? |
விடை: கார்பன் வயது கணக்கீடு. |
Q17. சிந்துவெளி நாகரிகத்தில் மிகப் பழமையான நகரம் எது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q18. இந்திய தொல்லியல் துறையால் எப்போது எங்கு உருவாக்கப்பட்டது? |
விடை: அலெக்சாண்டர் கன்னிங்கம், 1861, புது தில்லி. |
Q19. சிந்து சமவெளி எந்த உலோக காலத்தைச் சார்ந்தது? |
விடை: வெண்கல காலம். |
Q20. சிந்து சமவெளியின் பரப்பளவு யாது? |
விடை: 13 லட்சம் சதுர கிலோமீட்டர். |
Q21. சிந்து சமவெளியில் மொத்தம் எத்தனை நகரங்கள் இருந்தன & எத்தனை கிராமங்கள் இருந்தன? |
விடை: ஆறு பெரிய நகரங்கள், 200க்கும் மேற்பட்ட கிராமங்கள். |
Q22. பெருங்குளம் தானியக் கிடங்குகள் எங்கு இருந்தன? |
விடை: ஹரப்பா. |
Q23. சிந்துவெளி நாகரிகத்தின் முன்னோடி என்று அழைக்கப்படுவது எது? |
விடை: மெஹெர்கர். |
Q24. புதிய கற்காலத்தைச் சேர்ந்த நாகரிகம் எது? |
விடை: மெஹெர்கர். |
Q25. மெஹெர்கர் கலாச்சாரம் எந்த ஆற்றுப் பள்ளத்தாக்கில் அமைந்திருந்தது? |
விடை: போலன் ஆற்றுப் பள்ளத்தாக்கில். |
Q26. மெஹெர்கர் கலாச்சாரத்தின் காலம் எது? |
விடை: பொ.ஆ.மு 7000. |
Q27. சிந்து சமவெளியில் நீர் கசியாத பழமையான கட்டுமானத்தின் சான்றாக கருதப்படுவது எது? |
விடை: பெருங்குளம். |
Q28. சிந்து சமவெளியில் நீர் கசியாமல் இருப்பதற்காக பயன்படுத்தப்பட்ட பொருள் எது? |
விடை: இயற்கை தார். |
Q29. முதிர்ச்சியடைந்த ஹரப்பா காலத்தைச் சேர்ந்த தானியக் கிடங்கு இந்தியாவில் எங்கு உள்ளது? |
விடை: ராகிகர்கி, ஹரியானா. |
Q30. சிந்து சமவெளி கூட்ட அரங்கு எங்கு இருந்தது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q31. ஹரப்பா மக்கள் யாருடன் வாணிபம் செய்தனர்? |
விடை: மெசபடோமியா. |
Q32. மெசபடோமியா என்பது எந்த நாடுகளைக் குறிக்கிறது? |
விடை: ஈராக், சிரியா, குவைத். |
Q33. சிந்துவெளி முத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்ட மெசபடோமியா பகுதி எது? |
விடை: சுமேர். |
Q34. நாரம்-சிம் என்பவர் யார்? |
விடை: சுமேரியாவின் அக்காடிய பேரரசர். |
Q35. நாரம்-சிம் எங்கு அணிகலன் வாங்கினார்? |
விடை: சிந்து சமவெளியில் மெலுக்கா என்ற இடத்தில். |
Q36. பழங்கால நாகரிகத்தைச் சேர்ந்த உருளை வடிவ முத்திரைகள் எங்கு கண்டுபிடிக்கப்பட்டன? |
விடை: பாரசீக வளைகுடா, மெசபடோமியா, சிந்து சமவெளி. |
Q37. சிந்து சமவெளியில் கப்பல் கட்டும் மற்றும செப்பனிடும் தளம் எங்கு இருந்தது? |
விடை: லோத்தல், குஜராத். |
Q38. சிந்து சமவெளியில் அமர்ந்த நிலையில் உள்ள ஆண் சிற்பம் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q39. சிந்து சமவெளியில் தந்தத்தால் ஆன அளவு கோல் எங்கு கண்டுபிடிக்கப்பட்டது? |
விடை: குஜராத். |
Q40. சிந்து சமவெளியில் தந்தத்தால் ஆன அளவு கோலின் மிகச்சரியான அளவீடு யாது? |
விடை: 1704mm. |
Q41. மனிதனால் கண்டறியப்பட்ட முதல் உலோகம் எது? |
விடை: செம்பு. |
Q42. சிந்து சமவெளியில் வெண்கலத்தால் ஆன பெண் சிற்பம் எங்கு கிடைத்தது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q43. சிந்து சமவெளியில் காவிரி, பொருண் ஆறுகள் எங்கு உள்ளன? |
விடை: ஆப்கானிஸ்தான். |
Q44. சிந்து சமவெளியில் காவிரி வாலா, பொருண் ஆறுகள் எங்கு உள்ளன? |
விடை: பாகிஸ்தான். |
Q45. சிந்துவெளி மக்கள் எந்த வித ஆடைகளை பயன்படுத்தினர்? |
விடை: பருத்தி, கம்பளி. |
Q46. சிந்துவெளி மக்கள் அறியாத உலோகம் எது? |
விடை: இரும்பு. |
Q47. சிந்துவெளி மக்கள் ஆபரணம் செய்ய எந்த கற்களைப் பயன்படுத்தினார்கள்? |
விடை: சிவப்பு மணிகற்கள் (கார்னீலியன்). |
Q48. சிந்துவெளி மக்களின் தெய்வம் எது? |
விடை: தாய் தெய்வம். |
Q49. முதல் எழுத்து வடிவம் யாரால் உருவாக்கப்பட்டது? |
விடை: சுமேரியர்கள். |
Q50. யுனெஸ்கோவால் உலக பாரம்பரிய தளமாக அறிவிக்கப்பட்டது எது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q51. உலகின் முதல் திட்டமிடப்பட்ட நாகரிகம் எது? |
விடை: சிந்து சமவெளி. |
Q52. மிகப்பெரிய பழமையான நாகரிகம் எது? |
விடை: சிந்து சமவெளி. |
Q53. கதிரியக்க கார்பன் வயது கணக்கீட்டில் பயன்படும் ஐசோடோப் எது? |
விடை: C14. |
Q54. ஹரப்பா நாகரிகம் கிராம நாகரிகமா அல்லது நகர நாகரிகமா? |
விடை: நகர நாகரிகம். |
Q55. உலகின் முதல் முதலில் கட்டப்பட்ட பொது குளம் எங்கு உள்ளது? |
விடை: மொகஞ்சதாரோ. |
Q56. சிந்துவெளி நாகரிகத்தின் எல்லை? |
விடை: மேற்கு – மக்ரான் கடற்கரை, கிழக்கு – காக்ரா-ஹாக்ரா நதி பள்ளத்தாக்கு, வடகிழக்கு – ஆப்கானிஸ்தான், தெற்கு – மகாராஷ்டிரா. |
Q57. கிசா பிரமிடு யாரால் எப்போது கட்டப்பட்டது? |
விடை: குபு மன்னன், பொ.ஆ.மு 2500. |
Q58. மெசபடோமியாவின் சந்திர கடவுளின் பெயர் என்ன? |
விடை: சின். |
Q59. மெசபடோமியாவில் சந்திர கடவுளுக்கு கட்டப்பட்ட கோவில் எங்கு உள்ளது யாரால் கட்டப்பட்டது? |
விடை: உர் நகரில் நம்மு. |
Q60. இரட்டைக் கோவில்கள் யாரால் எங்கு கட்டப்பட்டன? |
விடை: இரண்டாம் ராமேசிஸ், அபு சிம்பல். |
Q61. மொகஞ்சதாரோ என்ற சொல்லின் பொருள் யாது? |
விடை: இறந்தவர்களின் மேடு. |
Q62. முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட சிந்துவெளி நாகரிகம் எது? |
விடை: ஹரப்பா. |
Q63. முதன்முதலில் பருத்திச் செடியை வளர்த்தவர்கள் யார்? |
விடை: சிந்து சமவெளி மக்கள். |